ஆடிவேல் சக்திவேல் பவனி கொட்டகலை பிள்ளையார் கோவிலை சென்றடைந்தது

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட திருவேலைத் தாங்கிய ஆடிவேல் சக்திவேல் பவனி கொட்டகலை பிள்ளையார் கோவிலை இன்று சென்றடைந்தது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தினால் வேல் பவனி இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (19) ஆரம்பமான சக்தியின் ஆடிவேல் சக்திவேல் பவனியின் இரண்டாம் நாள் பயணம் வவுனியா கந்தசுவாமி கோவிலில் விசேட பூஜைகளைத் தொடர்ந்து ஆரம்பமானது.

பூஜைகளைத் தொடர்ந்து ஆடிவேல் சக்திவேல் பவனிக்காக சிறப்புற வடிவமைக்கப்பட்ட அலங்காரத் தேரில் வேல் பெருமான் எழுந்தருள, வேல் பவனிஆரம்பமானது.

வவுனியா கந்தசுவாமி கோவிலில் இருந்து பயணத்தை ஆரம்பித்த வேல் பவனி மதவாச்சியை சென்றடைந்த போது, அங்கு கூடியிருந்த மக்கள் வேல் பெருமானை தரிசித்து காணிக்கைகளையும் செலுத்தினர்.

வேல் பெருமானை தரிசிக்கும் வாய்ப்பு அனுராதபுரம் நகர வாழ் மக்களுக்கும் கிட்டியது.

தம்புள்ளை ஊடாக பயணித்த வேல் பவனி மாத்தளை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்ததுடன், அங்கு விசேட பூஜைகளும் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து, கொட்டகலை பிள்ளையார் கோவிலை சென்றடைந்த வேல் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

வேல் பவனியின் நாளைய பயணம் கொட்டகலை பிள்ளையார் கோவிலில் ஆரம்பமாகி, கொழும்பு ஜிந்துப்பிட்டியவில் நிறைவடையவுள்ளது.

ஆடிவேல் சக்திவேல் பவனி எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கெப்பிட்டல் மகாராஜா தலைமையக வளாகத்தை வந்தடையவுள்ளது.

தலைமையக வளாகத்தில் வேல் பெருமான் எழுந்தருளச் செய்யப்படவுள்ளதுடன், விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் 25 ஆம் திகதி வேல் பெருமான் கதிர்காமக்கந்தன் ஆலயத்தை சென்றடையவுள்ளார்.

Related posts

Leave a Comment