அமெரிக்கா – மெக்ஸிகோ இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ இடையே வர்த்தக உடன்பாடொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வட அமெரிக்க திறந்த வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் நிறைவு செய்வதற்கான அழுத்தம் அதிகரித்திருப்பதால் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நடைமுறையிலுள்ள இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்தும் விமர்சித்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வர்த்தக உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் ஒப்புதலுடன் குறித்த ஒப்பந்தம் முழுமை பெறவுள்ளது.

ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப்போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

குறித்த ஒப்பந்தத்தினூடாக அமெரிக்காவின் உற்பத்திகள், குறிப்பாக வாகன உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன்காரணமாக 1994 ஒப்பந்தம் தொடர்பில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வலியுறுத்தல் விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கனடா இந்த ஒப்பந்தத்தின் மூன்றாவது நாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment