அணை கட்­டி­யி­ருந்தால் வெள்ளம் ஏற்­பட்­டி­ருக்­காது : பிர­தமர் 2001 லேயே திட்­ட­மிட்­டி­ருந்தார் என்­கிறார் அமைச்சர்

களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்­வள கங்கை ஆகி­ய­வற்றின் நீரை முறை­யாக முகா­மைத்­துவம் செய்­யா­மையே கடந்த நாட்­களில் ஏற்­பட்­டி­ருந்த பெரு வெள்­ளத்­திற்கு கார­ண­மாகும்.

1968 இல் ஐக்­கிய அமெ­ரிக்க  நிறு­வ­ன­மொன்­றினால் விடுக்­கப்­பட்ட அறிக்­கையின்  பிர­காரம் 2001 ஆம் ஆண்டில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்க முன்­மொ­ழிந்த திட்­டத்தை நிறு­வி­யி­ருந்தால் வெள்ளம் ஏற்­பட்­டி­ருக்­காது எனவும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­கு­ண­வர்­தன தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த நாட்­களில் ஏற்­பட்ட பெரு­வெள்ளம் தொடர்­பாக பலர் பல­வித கருத்­துக்­களை தெரி­விப்­பதை அவ­தா­னிக்க முடிந்­துள்­ளது. நாம் சிந்­திக்க வேண்­டி­யது என்­ன­வெனில் இப் பெரு­வெள்ளம் ஒரு நாடாக எம்மை முக்­கிய தீர்­மான மையம் ஒன்­றுக்கு கொண்டு வந்­துள்­ளது.

நாம் முதலில் வெள்­ளத்தை பற்­றியே சிந்­திக்க வேண்டும். பராக்­கி­ர­ம­பாகு கூறி­யதை போன்று பூமியில் விழும் ஒவ்­வொரு நீர்­து­ழியும் வீண்­போ­காமல் நீர்­பா­ச­னத்­துக்கு சென்­றி­ருக்­கு­மானால் இன்று இப்­ப­டி­யா­ன­தொரு அழிவு ஏற்­பட்­டி­ருக்­காது.

2003 ஆம் ஆண்டை போன்று நீர் பெருக்­கெ­டுத்து ஒடு­வதை கட்­டுப்­ப­டுத்த முறை­யான முறை­மை­யொன்று செயற்­ப­டுத்­தப்­ப­டா­மை­யினால் வீட்டு கூரை­க­ளுக்கு மேல் நீர் பெருக்­கெ­டுத்­தி­ருந்­தது. இதனால் சம­யலறை பொருட்கள் வீ்ட்டு உப­க­ர­ணங்கள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய உடை­மைகள் யாவும் நீரில் அடித்துச் செல்­லப்­பட்­டி­ருந்­தது.

2003 ஆம் ஆண்டை போன்றே இன்னும் இரண்டு மாதங்­களில் நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டால் இட­ருக்கு உட்­பட்ட பகு­தி­க­ளையும் மக்கள் வாழ்க்­கையும் விரை­வாக சீராக்க முடியும். அரச நிறு­வ­னங்­க­ளான இடர் முகா­மைத்­துவ அமைச்சு உள்­நாட்­டு அலு­வல்­களை அமைச்சு, பாது­காப்பு அமைச்சு, உள்­ளிட்­டவை மிகவும் அர்­ப­ணிப்­புடன் செயற்ட்­டி­ருந்­தன.

தற்­போது நாம் இப்­பி­ரச்­சி­னையை சரி­யாக புரிந்­துக்­கொள்­ள­ாவிட்டால் இன்னும் 10 ஆண்­டு­களில் இதுபோல் 200 அல்ல 20 ஆயிரம் உயிர்­களை இழக்க வேண்­டிய நிலைமை ஏற்­ப­டலாம். பொறுப்­பு­மிக்க அர­சாங்கம் என்ற வகையில் இவ்­வெள்­ளத்தை முற்­றாக இல்­லாமல் செய்ய முடியும் என நாம் கூறு­கின்றோம்.

பொது­மக்­களும் அர­சியல் வாதி­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டால் இது சாத்­தி­ய­மாகும். ஜிங் கங்­கையின் நீரை முறை­யாக முகா­மைத்­து­வப்­ப­டுத்­தா­மையே இவ்­வா­றா­ன­தொரு வெள்ள அனர்த்தம் எற்­பட்­டுள்­ளது.

மேலும் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் நிறு­வனம் ஒன்று இலங்­கைக்கு 1968 ஆம் வழங்­கிய ஆய்­வ­றிக்கை ஒன்றில் ஜிங் கங்கை, நில்­வள கங்கை, களு கங்கை ஆகிய மூன்று நதி­க­ளுக்கும் செல்லும் நீரை நாம் முறை­யாக பாது­காக்­காத பட்­சத்தில் அதனை அண்­மித்து வாழும் மக்­களின் வாழ்­வா­தாரம் பாதிக்­க­படும் என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

அதேபோல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கள 2001 ஆம் ஆண்டில் ஜிங் கங்­கைக்கு ஒரு அணை கட்ட வேண்டும் என்று கூறி­யி­ருந்தார் அதனை நில அப­க­ரிப்பு என்றும் சதி முயற்சி என்றும் அர­சியல் சக்­திகள் எதிர்த்­தது போலவே மக்­க­ளையும் தூண்டி விட்­டார்கள். எனவே  அன்று நாம் அந்த பாது­காப்­பான செயன்­மு­றையை மேற்­கொண்­டி­ருந்தால் இன்று அழிவு நேர்ந்­தி­ருக்­காது. அத்­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  2001 ஆம் ஆண்டு ஜிங் கங்கை பெரு அணை ஒன்றை நிர்­மா­ணிக்கு பிரே­ர­ணையில் சீன அர­சாங்­கத்­துடன் ஒப்­பந்தம் ஒன்­றி­ணையும் செய்ய தீர்­மா­னித்­தி­ருந்தார்.

அதனால் 60 வருடங்களுக்கு? முன்பாக குறிப்பிடப்பட்ட மேற்படி ஆய்வறிக்கையின் படி மேற்படி மூன்று நதிகளிலும நீர் வழிந்தோடும் பகுதிகளை அறிந்து அதன் அணைகளை கட்டும் பட்சத்தில் மேற்பட்டி வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும். அதேபோல் காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மின் உற்பத்தி செய்யவும் முடியும் என்றார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *